அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.
தற்போது இவர்களோடு நடிகர் சௌந்தரராஜாவும் இணைந்திருக்கிறார். பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார்.
சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என்று சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யுடன் நடிப்பது குறித்து, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Happy to be a small part but meaningful role in #Vijay63 after #Theri. Thanks to @Atlee_dir brother?. No words to express my happiness working with @actorvijay anna combinations today ??. pic.twitter.com/7gWbCTe0bF
— Soundara Raja Actor (@soundar4uall) March 2, 2019