Loading...
திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் வானொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று நண்பகல் அளவில் இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்த சாரதி நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
வானின் சாரதிக்கு கை உடைந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது வானில் இருந்த மற்றைய நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Loading...
Loading...