இலங்கையின் புதிய வரைபடத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர திட்டம், ஹம்பாந்தோட்ட துறைமுக திட்டங்களின் பின்னர், இலங்கை வரைபடத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்ளடக்கியதாக புதிய வரைபடமே வெளியிடப்படவுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் பின்னரான மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்த வரைபடம் தயாராகி வருகிறது.
கொழும்பு துறைமுக நகரம், ஹம்பாந்தோட்ட துறைமுகம், மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் போன்ற பிரமாண்ட திட்டங்களாலேயே புதிய வரைபடம் வெளியிடப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களினால் நிலப்பரப்பிலும், கடலோரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அதிவேக வீதி, மற்றும் இதர அபிவிருத்தி திட்டங்கள் இந்த வரைபடத்தில் உள்ளடக்கப்படும்.
இந்த வரைபடம் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் தயாராகி வருகிறது. இதற்கு முந்தைய வரைபடங்கள் வான்வழியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உதவியுடனே தயாரிக்கப்பட்டிருந்தன.
மார்ச் மாத இறுதியில் இந்த வரைபடம் வெளியாகும்