Loading...
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கணக்காளரின் பண பெட்டியிலிருந்து 3.6 ஆறு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அனுராதபுர பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று அதிகாலையில் இந்த களவுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் பணம் வழங்கல் பிரிவு அறையில் இருந்து பகுதியளவில் தீக்கிரையாக்கப்பட்ட முக்கிய ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
Loading...