இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கை ஒன்றை விசாரிப்பதற்கு சபையின் முன்னாள் தலைவர் ரமல் சிறிவர்த்தன தடை ஏற்படுத்தியதாக போக்குவரத்து அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மோசடி செயற்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் சபையினால் இரண்டு மில்லியன் ரூபா சேமிக்கக் கூடியதாக இருந்தது.
பஸ் வண்டி சாரதிகள் மற்றும் நடந்துனர்களுக்காக காப்பறுதி நிறுவனங்களில் மூன்றாம் தரப்பு காப்புறுதி விண்ணப்பங்களும் கேள்விகளும் முன்னாள் தலைவர் சேவையில் இருந்த போது கோரப்பட்டன.
இருந்த போதிலும், தொழில்நுட்ப குழு காப்புறுதி நம்பிக்கை நிதியத்தை முன்மொழிந்தது. ஏனெனில் ஏனைய காப்புறுதி நிறுவங்களிலும் பார்க்க குறைந்த பெறுமதி கொண்ட கேள்வியை இந்த நிதியம் முன்வைத்திருந்தது.
இருப்பினும், சபையின் கொள்வனவு குழுவுக்கு தலைமை தாங்கிய முன்னாள் தலைவர் இந்த பரிந்துரைகளை நிராகரித்து வேறொரு கேள்வி கோரலுக்கு குறிப்பிட்ட விண்ணபத்தை வழங்கியிருந்தார்.
இதுவிடயம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும்படி அமைச்சர் அர்ஜூன் ரணதுங்க அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதன் விளைவாக குறிப்பிட்ட கேள்வி கோரல் காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு வழங்கப்பட்டது.