நாடு முழுவதும் ஏடிஎம் அட்டைகளை திருடி வங்கி ஏடிஎம் நிலையங்களில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும் கும்பலங்களில் பெண்களும் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரபல வர்த்தகர்களிடமே அதிகமான ஏடிஎம் அட்டைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
களுத்துறையில் பிரபல வர்த்தகரான சீனாவில் இருந்து கட்டட பொருட்கள் கொண்டு வரும் மொஹமட் ருகஷி மொஹமட் என்பவரின் ஏடிஎம் அட்டையை திருடி 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கொள்ளை கும்பல் தொர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஏடிஎம் அட்டைகளுக்காக பணப்பைகளை திருடும் நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வங்கிகளின் தகவல் மற்றும் பாதுகாப்பு கமரா கட்டமைப்பின் தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிபதி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.