ஒரு போரினால் பாதிக்கப்பட்ட மாணவனின் பட்டப்படிப்பு கனவை சிதைத்த யாழ் பல்கலை கழக மாணவர்கள்!
யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த மாணவன் ராக்கிங் காரணமாக தனது பல்கலைக்கழக படிப்பை இடைநிறுத்துவதாக முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
குறித்த பதிவு பின்வருமாறு அமைந்துள்ளது.
#பகிடிவதையால் #முற்றுப்பெறுகின்றது #எனது #பட்டப்படிப்பு
சம்மந்தபட்டவர்களுக்கு நன்றி.
பத்தாம் தரத்தில் படிக்கும் போது பலகனவுகளும் பல எதிர்பார்ப்புக்களும் சாவால்களும் எம்முன்னே! அவற்றை எல்லாம் கடந்து சாதரணதரம் என்னும் முதலாவது தடையை தாண்டுவதற்கு பகல் இரவாய் கண்முழித்து அந்ததடையை தான்டினேன் அதை தான்டியவுடன் பெறும் ஆனந்தம் எதோ நினைத்ததை சாதித்து விட்டோம் கனவுகள் நெருங்கி விட்டது என்று அப்போது சொல்வார்கள் ஆசிரியர்கள் நீங்கள் சாதாரணதர பரீட்சையில் சித்தி அடைந்தால் போதும் உயரர்தரத்தை இரண்டுவருடங்கள் ஆடி பாடி படித்து இலகுவில் படிக்கலாம் என்று அதையே வேதவாக்காய் நம்பி உயர்தரத்தை விளையாட்டாக படிக்கத்தொடங்கினேன் உயர்தரம் முதலாம் இரண்டாம் தவனை வரை பள்ளி வகுப்புக்கள் தவிர ஏனைய பிரத்தியோக வகுப்புக்கள் எதற்கும் செல்லாது விளையாட்டாய் படித்தேன் பெறு பேறுகளும் விளையாட்டாய் வந்து சேர்ந்து வகுப்பில் கடசி மாணவனாக நின்றேன்.
அப்போது ஓர் ஆசிரியர் சொன்னார் தம்பி உயர்தரம் என்பது விளையாட்ட இல்லை உயர்தரத்தை கஸ்டப்பட்டுபடித்தால்தான் பல்கலைக்கழகம் செல்லாம் அங்கு சென்று ஆசனங்களிற்கு பாரமாக இருந்தாேலே போதும் டிகரி கையில் வரும் வேறு ஒருபிரச்சனையும் அங்கு இல்லை என்றார் அவரின் கதையை வேதவாக்காய் நினைத்து பள்ளியிலும் பிரத்தியோக (#பிரத்தியக வகுப்பு #படிப்பதற்கு #மாதந்த #கட்டணம் #கட்டுவதற்கு #நானும் #எனது #நெருங்கிய #நண்பன் ஒருவரும் #செய்த #தொழில்களை எமது #புத்தக #பைகளைக்கேட்டால் #சொல்லும் ஏன் #என்றால் அவை #புத்தகங்களை சுமந்ததை #விட #கத்திகளையும் #குத்தூசிகளையும் #சுமந்ததே அதிகம்) வகுப்புகளிலும் என்னை அடையாளப்படுத்தி படித்து சிறந்த பெறுபேறு பெற்று யாழ்பல்கலைக்கழகம் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.
எதோ கையில் பட்டம் கிடைத்து விட்டது போன்று நினைப்பு முதல்முதலாக பல்ககை்கழகத்தில் கால்வைத்தேன் வைக்கும்போது நான் கண்ட கனவுகள் இலட்சிய பாதைகள் அனைத்தும் என் கண்முன்னே வந்தது அவைஅனைத்தும் வந்த சில நொடிகளில் என் கன்னத்தில் இடி விழுந்தது போன்று சத்தம் யார் என்று பார்த்தால் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களாம் அடித்ததற்கும் காரணம் எதுவும் சொல்லாது நகர்ந்து சென்றார்கள்.
இவ்வாறான செயற்பாடுகள் முடிவின்றி தொடர்து கொண்டே இருந்தது ஏன் என்று ஆராய்ந்து பார்தேன் அதற்கு எனக்கு கிடைத்த பதில்கள்
1)அவர்கள் எமக்கு அடிப்பது #பகிடிவதையாம்
2)#கலைப்பீட மாணவர் என்றால் இரண்டு வருடங்கள் பகிடிவதை நடக்குமாம் அதில் இவ்வாறு அடிப்பார்களாம்
3)#சிரேஸ்ர மாணவர்கள் மாணவர்கள் சொல்லும் ஆடையைதான் நாம் இரண்டு வருடங்கள் அணிய வேண்டும் என்று கூறினார்கள்அவர்களின் இரண்டு வருட ஆடை ஒழுங்கு
1)#முதலாம் வருடம் அரையாண்டில்
அகலம் கூடிய ஜீன்ஸ அகலம் கூடிய மேல் மணிக்கட்டு வரையான மேற்சட்டை காலில் தென்னம்பிள்ளை கறுப்பு பாட்டா மேற்கச்டையை கால்சட்டைக்குள் விட்ட இடுப்பு பட்டி கட்டக்கூடாது. (எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்)
2)#முதலாம் வருடம் இரண்டாம் ஆண்டில்
அதேபோன்று தான் அகலம் கூடிய ஜீன்ஸ அகலம் கூடிய மேல் மணிக்கட்டு வரையான மேற்சட்டை காலில் தென்னம்பிள்ளை கறுப்பு பாட்டா விற்கு பதிலாக கறுப்பு நிற சப்பாத்து மேற்கச்டையை கால்சட்டைக்குள் விட்ட இடுப்பு படட்டி கட்டக்கூடாது.
(3)#இரண்டம் #வருட #முதலாம் #அரையாண்டில்
அதே போன்று தான் அகலம் கூடிய ஜீன்ஸ அகலம் கூடிய மேல் மணிக்கட்டு வரையான மேற்சட்டை காலில் தென்னம்பிள்ளை கறுப்பு பாட்டா விற்கு பதிலாக கறுப்பு நிற சப்பாத்து மேற்கச்டையை கால்சட்டைக்குள் விட்டு இடுப்பு பட்டி கட்டுதல்.
இவை அனைத்திற்கும் மேலாக பகிடி வதை என்னும் போர்வையில் தாங்கள் தங்கும் அறைகளில் எங்களைகூட்டிச்சென்று இரக்கம் இன்றி தாக்குதல் இவை அனைத்தும் அவர்களிற்கு பகிடியாக இருந்தது.
இதனை எதிர்க்க முயன்ற என்மீது பல விதமாக உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் நான் கண்ட கனவு இலச்சியம் எல்லாம் பகிடிவதை என்னும் போர்வைக்குள் புதையூண்டு போனது எனது பாதுகாப்பு கருதி எனது பெற்றோர் பல்கலைக்கழகம் செல்தை தடுத்தார்கள் அதையும் மீறி நேற்று எனது உறவினர் ஒருவருடன் பல்கலை சென்றேன் அங்கு காத்திருந்தது அதிர்ச்சி எனது சகோதரனை பல்கலைவளாகத்தில் வைத்து அவதூராக பேசி வெளியில் அனுப்பினார்கள் சிரேஸ்ட மாணவர்கள். அதன்பின் என்னை சூழ்ந்தார்கள் நான் பாதுகாபபான ஓர் இடத்திற்கு சென்றபின் தகுந்த அதிகாரிகள் அங்கு வந்து அனைத்தையும் தீர்த்து விட்டார்கள். அனைத்தும் முடிந்து பல்கலைக்கழக நுழைவாயில் வரை பல்கலைக்களகத்தில் ஒழுக்காற்று சம்மந்தமா ஆசிரியரும் கலைப்பீட ஒன்றிய தலைவரும் கொண்டுவந்து விட்டார்கள் அதன்பின் ஒழுக்காற்று ஆசிரியர் சென்றுவிட்டார் கலைப்பீட ஒன்றிய தலைவரும் நானும் கதைத்துக்கொண்டு இருக்கும் போது 3ம் வருடத்தில் பட்டப்படிப்பை முடிக்கும் ஒருவர்
என்னருகில் வந்து இவனை ஏன் பல்கலைக்கழகத்திற்குள் எடுத்தீர்கள் இவன் எல்லாம் ஒரு ஆள் என்று நிக்கவச்சு கதைக்கிறிங்கள் அடிச்சு திறத்துங்கள் என்றார். இதான் பகிடிவதையை எதிர்த்தால் நிலை.
எனியும் பல்கலைசென்றால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று எனக்கே தோன்றுகின்றது நேற்றைய சம்பவத்தில் இருந்து.
#கனவுகள் #அனைத்தும் #புதைந்தது #பகிடிவதையால் #பட்டப்படிப்பும் #இடையில்முற்றுப்பெற்றது.
இப்படிபட்ட மாணவர்கள் இருக்கும் வரை எனது கனவு மட்டுமன்றி அனைவரினதும் கனவும் சிதைவுதான்…!