இலங்கையில் தேடப்பட்டு வந்த பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரபல ரௌடியான “புளுமென்டல் சங்க“ உள்ளிட்ட மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கேரளா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, இராமநாதபுரத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சங்க கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை இளைஞர்கள் சிலர் வீசா இல்லாமல் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள் என்ற தகவலே பொலிசாருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, அங்கு சுற்றிவளைப்பை நடத்திய பொலிசார் இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போதே, இலங்கையில் தேடப்பட்டு வரும் குற்றவாளியென பிரபல ரௌடி சங்க என்பவனை கைது செய்ததை பொலிசார் அறிந்தனர்.
குமார் என்ற பெயரில் இந்தியா அடையாள அட்டை சங்கவிடம் காணப்பட்டுள்ளது. இவருடன் இலங்கையைச் சேர்ந்த எஸ். மொஹமட் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.