இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர், அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இந்தியா அணி டோனி மற்றும் கேதர் ஜாதவ்வின் பொறுப்பான துடுப்பாட்டத்தால், 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றது. இப்போட்டி நாளை, நாக்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா அணிக்கு விராட் கோஹ்லியும், அவுஸ்ரேலியா அணிக்கு ஆரோன் பின்ஞ்சும் தலைமை தாங்குகின்றனர்.
ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, அதே உத்வேத்துடன் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது. மறுபுறம் தோல்வியின் விரக்தியில் உள்ள அவுஸ்ரேலியா அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.
இப்போட்டியை பொறுத்தவரை இந்திய அணியில் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, கே.எல். ராகுல் உள்வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலும் அவுஸ்ரேலியா அணியை பொறுத்தவரை, அணியில்எவ்வித மாற்றங்களும் இருக்காது என நம்பப்படுகின்றது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரோஹிர் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் டோனி, லோகேஷ் ராகுல், ரிஷப்பண்ந் ஆகிய துடுப்பாட்ட வீரரகள் உள்ளனர்.
பந்து வீச்சில் பும்ரா, மொஹமட் ஷமி, சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் உள்ளனர். சகலதுறை வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்ரேலிய அணியில், உஸ்மான் கலாஜா, ஷோன் மார்ஷ், ஆர்ஸி ஷோர்ட் பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோயினிஸ் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ், நாதன் கோல்டர் நைல், நாதன் லியோன், ஆடம் செம்பா, ஜெய் ரிச்சர்டசன், ஹெண்ட்ரூ டை ஆகியோர் உள்ளனர்.
இப்போட்டியில், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் நாக்பூர் – விதர்பா சர்வதேச விளையாட்டு மைதானத்தை பொறுத்தவரை இம்மைதானத்தில் 45,000 பேர், போட்டியை நேரில் கண்டுகளிக்க முடியும்.
இம்மைதானத்தில் 354 ஓட்டங்களே முதல் இன்னிங்ஸிற்காக அதிகபட்ச ஓட்டமாக பெறப்பட்டுள்ளது. சேஸிங் ஓட்ட எண்ணிக்கையாக 351 ஓட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல இரு அணிகளும் இதுவரை 131 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா அணி 48 போட்டிகளிலும், அவுஸ்ரேலியா அணி 73 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. மேலும் 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
ரி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவற்காக இந்தியா சென்றுள்ள அவுஸ்ரேலியா அணி, முதலில் நடைபெற்ற ரி-20 தொடரை முழுமையான வெற்றிக்கொண்டு சரித்திரம் படைத்தது.
இந்நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடரை வெற்றிக்கொண்டே ஆக வேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அத்தோடு சொந்த மண்ணில் பெற்ற அவமான தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்பதில் அவுஸ்ரேலியாவும் தீவிரமாகவுள்ளது.