பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அதி நவீன ஆயுதங்கள் புதிதாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விசேட அதிரடிப்படையினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என கட்டளை அதிகாரி எம்.ஆர்.லதீப் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான நடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் கூறினார்.
இதில் விசேட அதிரடிப்படையினரின் தேவைக்காக 1000 துப்பாக்கிகள், அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்படவுள்ளதாக, மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படவுள்ள ஆயுதங்களில் M-16 துப்பாக்கிகள் 500, MP-5 உப இயந்திரத் துப்பாக்கிகள் 250, கைத்துப்பாக்கிகள் 250 என்பன அடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.