Loading...
நடிகர் ராஜ்கிரணை முக்கிய கதாபத்திரத்தில் வைத்து பவர் பாண்டி என்ற படத்தை முதன்முதலாக இயக்கியிருந்தார் நடிகர் தனுஷ். படமும் ஓரளவுக்கு வெற்றியடைந்தது.
இதனால் எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரை வைத்து 2வதாக ஒரு படத்தை இயக்கும் வேலையில் ஆயத்தமானார், தனுஷ். ஆனால் இன்னமும் அப்படத்திற்கான வேலைகள் துளியும் ஆரம்பிக்கப்படவில்லை.
Loading...
இதற்கு காரணம், படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கவுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம். இதனால் தான் படத்தின் படப்பிடிப்பை இன்னமும் ஆரம்பிக்காமல் வெற்றிமாறன் இயக்கும் அசுரன் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் தனுஷ்.
Loading...