திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் அடித்து உடைக்கப்பட்ட சிவராத்திரி வளைவை மீளப்பொருத்தும் நடவடிக்கை துரித கதியில் நடந்து வருகிறது. இன்னும் சிறிதுநேரத்தில் அந்த பணிகள் முழுமை பெற்றுவிடும்.
கத்தோலிக்கர்களால் வீழ்த்தப்பட்ட நந்திக்கொடியும் மீள ஏற்றப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்த சிவராத்திரி வளைவு பழுதடைந்திருந்தது. அதை அகற்றிவிட்டு புதிய வளைவு நேற்று வைக்கப்பட்டது.
எனினும், சிறிதுநேரத்திலேயே கத்தோலிக்க மத குழு, பாதிரிகள் சிலரால் அது அடித்து உடைக்கப்பட்டது.
இந்த விவகாரம் இன்று மன்னார் நீதிமன்றத்தில் அவசர வழக்கமாக பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ஆராய்ந்த மன்னார் நீதிவான், அடுத்த நான்கு நாட்களிற்கு வளைவை வைக்க அனுமதித்துடன், அதன்பின்னர் வழக்கை விசாரிக்க தவணையிட்டுள்ளார்.
இதையடுத்து, திருக்கேதீஸ்வர வளைவை அதே இடத்தில் வைக்கும் பணிகள் நடந்து வருகிறது.