குழந்தை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஊன்று கோலாக இருப்பது. குழந்தையின்மை பிரச்சனை பெண்களை மட்டும் தாக்குவதில்லை ஆண்களையும் பாதிக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் வாழ்க்கை முறையும், பார்க்கின்ற வேலையும் கூட காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருப்பது, சூடான நீரில் குளிப்பது என பல காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படலாம். ஆண்மையை அதிகரிக்க மிக எளிதான தீர்வு இருக்கிறது. அதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.
ஆண்மை குறைய காரணங்கள் இறுக்கமாக உடை அணிவது, சூடான நீரில் குளிப்பது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது, ஒருவேளை நீங்கள் ஒரு ஓட்டுனராக இருந்தால், நீங்கள் அதிக நேரம் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும்.
இதனால் உடல் அதிகமாக சூடாகும்.விந்தணுக்கள் சூடாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தாலும், விந்தணுக்கள் வளர குளிர்ந்த வெப்பநிலையே தேவை.. நீங்கள் இறுக்கமான உடை அணிவது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது போன்றவை விந்தணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும்.