நமது பண்டைய கால வேதங்களும், சாஸ்திரங்களும் கலியுகத்தை எப்படி வழிநடத்த வேண்டுமென்ற வழிமுறைகளை கூறியுள்ளது. இந்த வழிமுறைகள் நமது வாழ்வை பாவங்கள் இன்றி எப்படி வாழ வேண்டும் என்றும், அதனால் நமது இறப்பிற்க்கு பிறகான வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கூறியுள்ளது.
பொதுவாக புராணங்கள் கடவுள் வழிபாட்டை பற்றியும், கடவுளின் மகிமைகளை பற்றியும் மட்டுமே கூறுவதாக நம்பப்படுகிறது.
உண்மையில் புராணங்களும், வேதங்களும் கடவுளின் வாயிலாக நமக்கு வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய தர்மத்தை பற்றியும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், பாவசெயல்கள் எதுவென்றும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்றுமே கூற முயலுகிறது. அதன்படி சில பெண்களுடன் உறவில் ஈடுப்படுவது என்பது மிகப்பெரும் பாவச்செயலாக கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த பெண்களுடன் ஒருபோதும் உறவு வைத்துக்கொள்ள கூடாது என்று பார்க்கலாம்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண்
ஆண்கள் ஒருபோதும் கன்னி பெண்களை ஏமாற்றியோ அல்லது பலவந்த படுத்தியோ அவளை திருமணம் செய்துகொள்ளாமல் தகாத முறையில் நடந்து கொள்ளக்கூடாது. பூமியில் வேண்டுமென்றால் இதற்கு தண்டனை இல்லாமல் இருக்கலாம், ஆனால் கடவுளின் நீதிமன்றத்தில் இதற்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படும்.
விதவை
கணவனை இழந்த ஒரு பெண்ணுடன் எந்த சூழ்நிலையிலும் ஆண் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை உண்மையில் அவளை விரும்பினால் மறுமணம் செய்துகொள்ள வேண்டுமே இந்த செயலில் ஈடுபடக்கூடாது.
பிரம்மச்சரியம் கடைபிடிக்கும் பெண்
ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கவோ அல்லது துறவு வாழ்க்கை வாழவோ முடிவெடுத்திருந்தால் அந்த பெண்ணை மாற்றவோ அல்லது தந்திரமாக அந்த பெண்ணின் மனதை மாற்றவோ முயலக்கூடாது. அவ்வாறு அந்த பெண்ணை கவருவது என்பது கொடிய பாவமாகும்.
நண்பனின் மனைவி
இந்த பாவம் மரணத்திற்கு பிறகான உங்கள் வாழ்க்கையை மிகவும் கொடியதாக்கிவிடும். எந்த சூழ்நிலையிலும் தன் நண்பனின் மனைவியுடன் அவர்களின் சம்மத்தின் பேரிலோ அல்லது கட்டாயப்படுத்தியோ தவறான உறவில் ஈடுபடக்கூடாது. இது மிகப்பெரிய மன்னிக்க முடியாத குற்றம் மற்றும் துரோகம்.
எதிரியின் மனைவி
தனது எதிரியின் மனைவியுடன் தகாத உறவில் இருக்கும் எந்த ஒரு ஆணும் தன்னை உயர்ந்தவன் என்று கூறிக்கொள்ள தகுதி அற்றவன் என்று வேதங்கள் கூறுகிறது. இது மிகவும் அரிதான பாவமாக கருதப்படுகிறது.
இளையோர் மனைவி
ஒரு ஆண் எப்பொழுதும் தனக்கு கீழே இருப்பவர்களின் மனைவியை தவறான நோக்கத்தில் பார்க்கக்கூடாது. அது மாணவராக இருந்தாலும் சரி, கீழே வேலை செய்பவராக இருந்தாலும் சரி அவர்களை பாசத்துடன் நடத்த வேண்டுமீ தவிர, அவர்கள் மீது காம இச்சை கொள்வது பாவமாகும்.
சொந்த குடும்பத்தில் இருக்கும் பெண்
தன் மனைவி தவிர வேறு எந்த பெண்ணுடன் தவறான உறவில் ஈடுப்பட்டாலும் அது பாவம்தான் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. குறிப்பாக தனது குடும்பத்தில் இருக்கும் பெண்ணுடனேயே உறவில் ஈடுபடுவது என்பது அனைத்தையும் வோட பெரிய பாவமாகும். இரத்த பந்தத்திற்குள் உறவில் ஈடுபடுவது அவர்கள் வம்சத்திற்கு பாவத்தை ஏற்படுத்தும்.
சுயநினைவில் இல்லாத பெண்
ஒரு பெண் தன் சுயநினைவில் இல்லாதபோது அவளுடன் உறவு கொள்வது என்பது பாவத்தின் உச்சம். மரணத்திற்கு பின் கொடுமையான தண்டனைகள் கிடைக்க கிடைக்க கூடாதென விரும்பினால் ஒரு பெண் சுயநினைவில் இல்லாதபோது அந்த சந்தர்ப்பத்தை உங்களுக்காக பயன்படுத்தி கொள்ளாதீர்கள்.
வயதில் மூத்த பெண்
தன்னை விட வயது அதிகமுள்ள பெண்ணை ஆண் எப்போதும் மதிக்க வேண்டுமே தவிர அவருடன் கலவியில் ஈடுபடக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது. இது கடவுளை அவமதிப்பதற்கு சமமாகும். வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவது நீங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என வேதங்கள் கூறுகிறது.
குருவின் மனைவி
தன்னுடைய குருவின் மனைவியுடன் தகாத உறவில் ஈடுபடுவது என்பது கடவுளின் பார்வையில் மன்னிக்க முடியாத குற்றமாகும். தனக்கு குருவாக இருக்கும் பெண்ணையும் எப்போதும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
வயதில் மூத்த பெண்
தன்னை விட வயது அதிகமுள்ள பெண்ணை ஆண் எப்போதும் மதிக்க வேண்டுமே தவிர அவருடன் கலவியில் ஈடுபடக்கூடாது என்று புராணங்கள் கூறுகிறது. இது கடவுளை அவமதிப்பதற்கு சமமாகும். வயதில் மூத்த பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுவது நீங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என வேதங்கள் கூறுகிறது.
சொந்தங்கள்
நாள்தோறும் இப்போது சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிலர் தவறான உறவில் ஈடுபடுவதாக செய்திகள் வருகிறது. அவர்கள் மரணத்திற்கு பிறகு கொடிய சித்திரவதைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். ஏனெனில் தன் தாய், சகோதரி, அத்தை முறையுள்ள பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டால் அவர்களுக்கு நரகத்தின் கதவு எப்போதும் திறந்திருக்கும்.
கர்ப்பிணி பெண்
கர்ப்பமாக இருக்கும் ஓர் பெண்ணுடன் எப்போதும் உறவில் ஈடுபடாதீர்கள். கட்டாயப்படுத்தியோ அல்லது விரும்பியோ பிறக்காத குழந்தை இருக்கும்போது முறையற்ற உறவில் ஈடுபடுவது மோசமான செயல் என்பதை காட்டிலும் மோசமான பாவமும் ஆகும்.
குற்றவாளிகள்
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் பெண்களுடன் எப்போதும் உறவில் ஈடுபடாதீர்கள், இது சாஸ்திரங்களால் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இது வாழும்போதே நரகத்தை உண்டாக்கும்.