கொழும்பு – கண்டிக்கு இடையில் பயணிக்கும் விசேட ரயில் ஒன்று பயணிகளுக்கு தெரியாமல் பயணித்துள்ளமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கியும் கண்டியில் இருந்து கொழும் கோட்டை வரையிலும் பயணிக்கும் விசேட ரயில் சேவையே இவ்வாறு இடம்பெற்றுள்ளது.
நேற்று பயணித்த குறித்த ரயில் சேவை தொடர்பான தகவல் அட்டவணையில் உள்ளடக்குவதில் ஏற்பட்ட தாமதமே இந்த நிலைக்கு காரணமாகும்.
குறித்த விசேட ரயில் வார இறுதி நாட்கள், பௌர்ணமி தினம் மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் பயணிக்கின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து காலை 9.00 மணிக்கு பயணித்து காலை 11.35 மணிக்கு கண்டியை சென்றடையும். மாலை 4.55க்கு கண்டியில் இருந்து புறப்பட்டு கொழும்பிற்கு வருவதற்காக இந்த ரயில் செயற்படுகின்றது.
இந்த ரயிலில் ஆசனம் ஒதுக்கிக்கொள்ள இரண்டு வாரங்களுக்கு முன்னரே முற்பதிவு செய்ய வேண்டும். நேற்று அரச விடுமுறை நாளில் பயணித்த இந்த ரயில் தொடர்பில் அட்டவணையில் எந்த தகவலும் முன்கூட்டியே வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக இந்த சேவைக்காக பயணிகள் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த ரயில் தொடர்பில் எவ்வித தகவலும் பயணிகள் அறியாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் அரச விடுமுறையான நேற்று 3 பயணிகளுடன் மட்டுமே இந்த ரயில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளது.
இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 85000 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.