ஒருவர் மீது அன்பு செலுத்துவது என்பது சாதரண விஷயமல்ல. அதுவும் காதல் , வாழ்க்கைத் துணை என்று வரும் போது பல விதங்களில் நாம் யோசிப்போம்.
காதல் எந்த நேரத்தில் யார் மீது வரும் என்றெல்லாம் நம்மால் முன்கூட்டியே சொல்ல முடியாது. கிடைக்காது, நடக்காது என்று ஆரம்பத்திலேயே தெரிந்த ஒருவர் மீது நமக்கு காதல் வந்தால் அதிலிருந்து மீள்வது என்பது ரொம்பவே சிரமமான வேலை
ஒருவரை காதலிக்க வேண்டும் என்றோலோ வெறுக்க வேண்டும் என்றாலோ ஏதாவது காரணம் வேண்டும். வேண்டாம் என்று மூளை முடிவெடுத்த பிறகும் நம் மனம் அந்த நபரே வேண்டும் என்று தோணும். இதிலிருந்து நீங்கள் மீள சில வழிகள்
யோசனை :
மீண்டும் மீண்டும் அந்நபரை காதலிக்கலாமா என் காதலை ஏற்றுக் கொள்வார்களா என்று யோசிக்காதீர்கள். ஒரு முறை ரியாலிட்டியை உணர்ந்தால் அதை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதை விடுத்து உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
வெளியேறிடுங்கள் :
மறக்க நினைக்கும் நபரை நினைவூட்டும் விஷயங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிடுங்கள். அதே சூழலில் இருந்து கொண்டு உங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. இடைவேளி இருந்தால் மட்டுமே கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கவும், நல்ல முடிவுகளையும் உங்களால் எடுக்க முடியும்.
தொடர்புகள் :
பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. இதனை காதலாக கொண்டு செல்லக்கூடிய சூழல் இல்லை என்று தெரிந்தால் உடனடியாக பேசுவதை தொடர்புகளை நிறுத்திவிடுங்கள்.
காதல் இல்லை ஆனால் நட்பாக பேசலாம் என்று நீங்களாக வலுக்கட்டாயமாக ஒரு எல்லையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.
பூதக்கண்ணாடி :
இந்நபரை விட்டு நீங்கள் விலக வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுங்கள்.அவரது குறைகளை, தவறுகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
அந்நபரின் நினைப்பு வரும்போதெல்லாம் அவரது நெகட்டிவ் விஷயங்களை நினைத்தால் அந்நபரை அன்பு செய்வது குறையும்.
சுயநலம் :
இது முக்கியமாக கைகொடுக்கும் டெக்னிக். ஆம் சுயநலமாக நடந்து கொள்ளுங்கள் உங்களைப் பற்றி உங்களின் ஆரோக்கியத்தைப் பற்றி உங்களின் லட்சியத்தைப் பற்றி அதிகமாக சிந்தியுங்கள்.
உங்களுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கும் போது பிற விஷயங்களில் ஈடுபாடு குறையத் துவங்கும். இதனால் எளிதாக நீங்கள் அதிலிருந்து மீள முடியும்.
லட்சியம் :
குறுகிய கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதனை அடைவதற்காக உங்களை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய அதிக நேரம் செலவிடுங்கள்.