மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் திருமண பந்தத்தில் எந்த ஒரு விரிசலும், பிரச்சனைகளும் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக தான், முன்னோர்கள் பெண்களை விட ஐந்தாறு வயது மூத்த ஆண்களுடன் திருமணம் செய்து வைத்தனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
மன ரீதியாக காணும் போது, 20 வயது பெண்ணுக்கும், 25 வயது ஆணுக்கும் ஒரே நிலையான மன பக்குவம் தான் இருக்கும். இதனால், மன ரீதியான கருத்து வேறுபாடுகள் உண்டாகாது.அதேபோல, உடல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும், தாம்பத்தியம் மீதான ஆசை சராசரியாக ஆண்களுக்கு 50- 55 வயது வரையும், பெண்களுக்கு 40-45 வயது வரையும் இருக்கும். இதனால் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளும் எழாது.
ஆனால், இன்று இதெல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. பெண்கள் தன்னைவிட இளம் வயது ஆண்களை, ஆண்கள் தங்களை விட மூத்த பெண்களை காதலித்து, திருமணம் செய்துக் கொள்வது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
வேலை!
வயதில் மூத்த ஆண் துணை அதிகம் வேலையில் தான் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் தோள்களில் சுமை அதிகமாக இருக்கும்., கடமைகள் அதிகம் இருக்கும். ஆனால், இளம் துணை தங்களுடன் நேரம் செலவு செய்ய அதிகம் முயல்வார்கள் என ஒருசிலர் காரணம் கூறியுள்ளனர்.
திறந்த மனம்!
வயது மூத்த பெண்களுடன் இளைய ஆண்கள் ஜோடி சேரும் போது, அவர்கள் எதுவாக இருந்தாலும் திறந்த மனதுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள், பாராட்டுகிறார்கள். எதற்கும் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால், வயது மூத்த ஆண் துணை, இந்த செயல்களை வெளிப்படையாக செய்வதில்லை என கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு!
வயது மூத்த ஆணாக இருந்தால், என்ன செய்தலும், என்ன செய்கிறாய், ஏன் செய்கிறாய், இவள் ஏன் இப்படி செய்கிறாள் என நிறைய கேள்விக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனால், வயதில் தன்னைவிட இளம் ஆணாக இருந்தால், அவர்களுக்கு பெரியளவில் முதிர்ச்சி இருக்காது. ஆகையால், அதிகம் கேள்வி கேட்டு சந்தேகப்படமாட்டார்கள் என ஓர் ஆய்வில் பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உடல் ரீதியான ஈர்ப்பு!
வயதில் இளைய ஆண் அதிக எனர்ஜியுடனும், ஊக்கமுடனும் இருப்பார்கள். இது பயாலஜிக்கல் விஷயங்களை வைத்து ஒப்பிடும்போது, தங்களை விட பெண்களுக்கு வயதில் இளைய ஜோடி மீது அதிக ஈர்ப்பு உண்டாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வயதில் இளைய ஆண் ஜோடியுடன் பெண்கள் தைரியமாக உறவில் ஈடுபடுகிறார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்-லைப்!
முந்தைய உறவு குறித்த பதட்டம் அல்லது தடை, இடையூறுகள்இருக்காது. மூத்த ஆண்கள் தான் இதை ஒரு பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வார்கள். இளம் துணை அப்படி எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களிடம் இருந்து உறவு சார்ந்து கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கும் என பெண்கள் கருதுகிறார்கள்.
இளமை!
தங்களை விட வயது இளைய ஆணுடன் ஜோடி சேர்வதால், அந்த பெண்கள் தங்களையும் இளமையாக உணர்கிறார்கள். இது அவர்களை மன அழுத்தம் உண்டாகாமல் இருக்கவும், மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகவும் காரணியாக இருக்கிறது.
மேலும், நண்பர்கள் மற்றும் அலுவலக நபர்களுடனான சந்திப்பில் இந்த ஜோடி எப்போதும் ஒருபடி மேலாக திகழ்கிறது என்றும் கூறப்படுகிறது.
முயற்சி!
இளம் வயது துணை அதிகமாக உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் உறவில் பல விஷயங்களை புதுமையாக செய்து பார்க்க முற்படுவார்கள். இது உறவில் அதிக கேளிக்கை, சுவாரஸ்யம் நிறைந்து இருக்க காரணியாக அமையும் என வயது மூத்த பெண்கள் கருதுவதாக கூறப்பட்டுள்ளது.
தோற்றம்!
இளம் வயது துணை தனது உடல் தோற்றம் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். இதனால், அவர்கள் எப்போதும் கவர்ச்சியாக இருப்பார்கள் என்ற காரணமும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மகிழ்ச்சி!
இளம் வயது ஆண் ஜோடியுடன் உறவில் இணைவதன் மூலம் கிடைக்கும் அனுபவம் மற்றும் உணர்வுகள் மிகுதியான மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும். இதனால், வாழ்வில் அதிகம் சாத்திக்க ஊக்கம் பிறக்கும் என்றும் கூட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சுவாரஸ்யம்!
திடீர் பயணங்கள், பைக்கில் ஒரு ரைடு, முயற்சி செய்திராத ஆக்டிவிட்டிகளில் ஈடுபடுதல் என தன்னை விட வயதில் இளைய ஆணுடன் ஜோடி சேரும் போது வாழ்வில் அதிக சுவாரஸ்யங்கள் சேருகிறது என காரணங்கள் பல கூறப்பட்டுள்ளன.