ஹாங் காங்கில் 13 வயது சிறுவன் ஒருவன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் போன்று பந்துவீசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவின் பந்துவீசும் ஸ்டைல், மற்ற வீரர்களிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது.
குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து சுமார் 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசுவார்.
அத்துடன் அதே வேகத்தில் யார்க்கர் பந்தை வீசுவார், மேலும் சில சமயம் வேகம் குறைவாக வீசியும் துடுப்பாட்ட வீரரை திணறடிப்பார்.
இந்நிலையில், ஹாங் காங்கில் 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் 13 வயது சிறுவன் ஒருவன் பும்ராவைப் போன்று அச்சு அசலாக பந்து வீசினான்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.