“விக்டோரியா சீக்ரெட்டிடம் கேளுங்கள்… எங்கேயிருந்து உள்ளாடைகள் வருகின்றன என்பதை. அவர் சொல்வார்“
என பிரதமர் கூறியது, இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமரின் கூற்றை, நெட்டிசன்கள் கேலியாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நாம் 77ஆம் ஆண்டு முதலீட்டு அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்தப் போது, முதலில் ஆடைத் தொழிற்சாலையே திறக்கப்பட்டது. இதை சிலர் தையல் கடை என்று அப்போது கூறியதாய் எனக்கு நினைவிலுள்ளது. அப்போது சிலர் கூறினர் பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகளை தைப்போம் என்றனர். அவர்களிற்கு நாம் சந்தரப்பமளித்தோம். இப்போது பெண்களுக்கான சிறந்த உள்ளாடைகள் இலங்கையிலேயே தைக்கப்படுகின்றன. விக்டோரியா சீக்ரெட்டிடம் கேளுங்கள் எங்கேயிருந்து உள்ளாடைகள் வருகின்றன“ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.