முடியை அதிக வறட்சியின்றி வைத்திருக்க உதவுவது விட்டமின் A. தலை முடி வறண்டுவிடாமல் ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டுமே தலைமுடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதற்கு ஆரஞ்சுப் பழம், மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்கள், ப்ரோக்கோலி, முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்
முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று விட்டமின் B குறைபாடு தான். குழந்தைப் பருவத்தில் B12 பற்றாக்குறை இருந்தால் நரைமுடி வர வாய்ப்புகளும் உண்டு. இதனைத் தவிர்க்க மீன், ஆட்டுக்கறி, பால், முட்டை போன்றவற்றை நிறைய எடுத்துக் கொள்ளலாம்
சிட்ரஸ் ஆசிட் நிறைந்த பழங்கள், தக்காளி,உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பெர்ரீ பழங்கள் போன்றவற்றில் விட்டமின் C கிடைக்கும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிடும்.
செல்களின் வளர்ச்சிக்கு விட்டமின் D மிகவும் அவசியமானது. மாட்டுக்கறி, மீன், சீஸ் போன்றவற்றில் விட்டமின் D இருக்கிறது. தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்
இந்த உணவு முறைகளை பின்பற்றினால் முடி கொட்டுவது குறைந்து முடி நன்கு வளரும்.