விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்திக் கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.
பையாஸ் சேக் – ஹீனா தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6 ஆயிரம் அனுப்பி வந்தார்.
இந்நிலையில் இந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாகத் தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கரண்டியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.
வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக சம்பவம் குறித்து ஹீனா மீது பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் ஹீனாவை அதிரடியாக கைது செய்தனர்.
அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 75 வது பிரிவின் (சிறுவர்களுக்கு எதிரான சித்ரவதை) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.