Loading...
Milton பகுதியிலுள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Milton அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விபத்துக்குள்ளானதில் நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறித்த விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி தப்பியோடி இருந்த நிலையில், சில மணித்தியால தேடுதல் நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...
கைது செய்யப்பட்டுள்ள காரின் சாரதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிஸார், சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...