90-களில் பிறந்த குழந்தைகளின் நினைவில் இருந்து நீங்காத சில நிகழ்ச்சிகள் ஒலியும் ஒளியும், சக்திமான், காத்து கருப்பு, போன்றவை. இவை அனைத்திற்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தூர்தர்சன் தொலைக்காட்சியும், அதன் விளம்பர ஒலியும் தான்.
பல தனியார் தொலைகாட்சிகள் வந்து பொதிகை தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளிய நிலையிலும், இன்றளவும் இந்த ஒலியை கேட்டால் அனைரும் தங்களது குழந்தை பருவத்திற்கே சென்று வந்துவிடுவர். மனதை மயக்கும் இந்த ஒலியுடன் தற்போது பிரபலமாகி வரும் டிக்டாக் செயலியும் இணைந்தால் எப்படி இருக்கும் தெரியுமா? ஆம் அப்படி ஒரு காட்சியை தான் பார்க்கப்போகிறோம் நாம்.
Doordarshan would not hv imagined this in their wildest dreams !! ? pic.twitter.com/epJ86aVssE
— (•ิ_•ิ) Silk (@Ya5Ne) March 4, 2019
தற்போது இளைஞர்களை ஆட்டிப்படைத்து வரும் இந்த டிக்டாக் செயலி, தூர்தர்சன் சிக்நேச்சர் ஒலியையும் விட்டு வைக்கவில்லை. அவ்வாறு இந்த தூர்தர்சன் சிக்நேச்சர் ஒலிக்கு இளைஞர் ஒருவர் தன் நடன அசைவுகளைக் கொண்டுசேர்த்து மெருகேற்றியுள்ளனர். இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இந்த வீடியோவில் இருப்பவர் பெயர் வைசாக் நாயர் என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவில் இவர் தூர்தர்சன் சிக்நேச்சர் ஒலிக்கு தகுந்தவாரு உடல் அசைவுகளை மேற்கொள்வது பார்ப்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்னும் என்னலாம் பண்ண காத்துருங்களோ தெரியலை…