வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக எதிர் வரும் 9ஆம் திகதி பாடசாலை நடைபெறும் என வடமாகான ஆளுநர் கலாநிதி சுரேஷ் ராகவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சைவ மக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான சிவராத்திரியை முன்னிட்டு சிவராத்திரி (05.03.2019) ஆம் திகதி வடமாகான ஆளுநர் அவர்களின் பணிப்புக்கமைவாக வடமாகாண பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நாளுக்குரிய பதில் பாடசாலையை எதிர்வரும் (09.03.2019) சனிக்கிழமை அன்று நாடாத்துவதற்கும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பதில் பாடசாலை நடைபெறும் நாளன்று நடாத்தப்படுவதை உறுதிப்படுத்தி தங்கள் அறிக்கையினையும் மேலதிக அலுவகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.