கேரள மாநிலத்தில் சச்சின் – பவ்யா தம்பதியினரின் காதல் கதை மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்திலும் இப்படி ஒரு காவியக்காதலா? என மெய்சிலிக்க வைத்துள்ளது இந்த ஜோடி. சச்சினும் பவ்யாவும் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.
ஐந்து மாதங்கள் வரை மிக அழகாக சென்றுகொண்டிருந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்திற்கு மேல் காதலாக மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களின் காதலை வழக்கம் போல் பவ்யாவின் வீட்டில் எதிர்த்திருக்கிறார்கள். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சச்சின் கடந்த மார்ச் மாதம் முறைப்படி பவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.
நண்பர்களாக இருந்த நாங்கள் சரியாக இரண்டு மாதத்திற்கு பிறகு ஒருவருக்கொருவர் காதலில் விழுந்ததை உணர்ந்திருந்தோம். பவ்யா நான் படித்த இன்ஸ்டிடியூட்டிலேயே வேலை செய்ய தொடங்கி இருந்தார்.
அவருக்கு அப்போது முதுகில் வலி இருந்து கொண்டே இருந்துள்ளது. ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்யாணம் ஆன அதே மார்ச் மாதத்தில்தான் கண்டுபிடித்தோம். அவருக்கு முதுகுதண்டில் புற்றுநோய் இருக்கிறது என்று தெரியவந்தது.
ஆசையாக காதலித்த காதல் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதே என உடைந்துபோனார் சச்சின். புற்றுநோயால் பவ்யானின் முடி உதிர்ந்து, உடல் எடை குறைந்து தோற்றம் மாறியது.
ஆனால் நான் இந்த மாற்றங்களை பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் நான் விரும்பியது அவளது காதலை. உடம்பை அல்ல என்கிறார் சச்சின்.
இப்போது பவ்யாவை அழைத்து கொண்டு ஹீமோதெரஃபி சிகிச்சைக்கு அல்லாடிக் கொண்டிக்கிறார் சச்சின்.
23 வயதான சச்சின் திருமணத்திற்கு பின்னரும் தனது உயர்படிப்பை தொடர்ந்துள்ளார். ஆனால் மனைவியின் சிகிச்சைக்கு பணம் தேவை மற்றும் அவரை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதனை தியாகம் செய்துள்ளார்.
இனி என்ன நடந்தாலும் இந்த ஜென்மத்தில் பவ்யான தான் எனது மனைவி என்கிறார் சச்சின். இவர்களின் காதல் கதை மக்கள் மனதை கவர்ந்துள்ளது.