பெண்கள் பொதுவாகவே தன்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக வெளியில் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய உடல்மொழி மூலமாகவே தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.
ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப் புரிந்து கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள். அப்படி என்னென்ன மாதிரியான உடல்மொழியைப் பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமா?
எப்போதும் பெண்கள் உங்களைப் பற்றிய நினைவிலே இருப்பார்கள்
சாப்பிடும் நேரம், ஷாப்பிங் என எல்லா நேரங்களிலும் உங்களைப் பற்றியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் தான்.
உங்கள் முன் நிற்கும் போது, கைகளைக் கட்டாமல் நேராக நிமிர்ந்து நின்றாலே, நான் உன்னை விரும்புகிறேன். நீ என்னை அணுகலாம் என்றே பொருள்.
ஆனால் அதுவே பெண்கள் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நின்றால், அவர்களுக்கு உங்கள் மேல் அவ்வளவாக ஆர்வமில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
ஒரு ஆணின் கண்களைப் பெண்களால் தொடர்ந்து 10 விநாடிக்கு மேல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால், பெரும்பாலான பெண்கள் தரையைப் பார்த்தோ அல்லது ஆடைகளை பார்த்து பேசி கொண்டிருப்பார்கள்.
நீங்கள் அவர்களைப் பார்க்கும்போது விரல்களால் தலைமுடியை காதோரமாக ஒதுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை நீங்கள் கவனிக்கிறீர்களா? என்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதே நேரத்தில் தங்களுடைய கழுத்துக்குக் கீழே அவர்களின் பார்வை அடிக்கடி சென்று கொண்டிருக்குமேயானால் ஏன் இன்னும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று உங்களிடம் கேட்பதாக அர்த்தம்