Loading...
விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இதன் படப்பிடிப்பு இன்று கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் நடைபெற்றது.
படப்பிடிப்பின் போது புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷாலிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்து அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.
Loading...
அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஷால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள், விஷாலுக்கு நன்றி தெரிவித்தனர்.
Loading...