பெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம். ஆனால், தங்கள் எதிர்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஆண்கள் என்ன எதிர் பார்க்கிறார்கள் என்பது குறித்த பெற்றோர்களே பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், நமது சமூகத்தில் மருமகள் என்பவள் பார்க்க லட்சணமாகவும், வீட்டு வேலை செய்ய தெரிந்தவளாக இருந்தால் போதும் என்ற எண்ணமே இருந்தது. தற்சமயத்தில் நன்கு சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், இதற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு ஆண்கள் தன் துணை எப்படி இருந்தால் விரும்புவான். பாராட்டாமல் இருந்தாலுமே கூட… தன் மனனவி இந்த விஷயங்களை எல்லாம் செய்பவராக இருந்தால் கணவனின் மனம் மகிழுமாம்….
நகைச்சுவை உணர்வு!
பெரும்பாலான வீடுகளில் ஆக்ஷன் ஹீரோ, காமெடியன் என ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக இருப்பார்கள் ஆண்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் ஒரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் குணச்சித்திர வேடத்தை மட்டுமே ஏற்று நடிப்பார்கள். இதில் பெண்கள் அதிகம் ஸ்கோர் செய்தாலுமே கூட… நாம் மன அழுத்தத்தில் இருந்து, கொஞ்சம் ரிலாக்சாகவும் உணர காமெடி தான் உதவும்.
மனைவி சோகமாக இருந்தால் காமெடி செய்து தாங்கள் ரிலாக்ஸ் செய்வதை போலவே, தாங்கள் சோகமாகவோ, சோர்வாகவோ இருக்கும் போது மனைவி நகைச்சுவை செய்து ரிலாக்ஸாக உணர வைத்தால்… அதை ஆண்கள் வெகுவாக விரும்புவார்கள். ஆனால், அது குறித்து வெளிப்படையாக பாராட்ட மாட்டார்கள்.
தனக்கான நேரம்!
உறவில் பெரும்பாலும் சண்டை, மனஸ்தாபம், உண்டாக காரணமாக பெண்கள் கூறுவது, என்னுடன் நேரம் செலவழிப்பதில்லை என்பதை தான். ஆனால், பெண்கள் சில சமயம் ஆண்கள் சீரியசாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் இதை ஒரு பிரச்சனையாக எடுத்து பேசுவார்கள். அப்படி இல்லாமல், தனது வேலை பளுவை புரிந்துக் கொண்டு… மனைவி சமத்தாக இருந்துக் கொண்டால்… அதை ஆண்கள் வெகுவாக விரும்புகிறார்கள்
தீராத விளையாட்டு!
கவுண்டர் (Counter Jokes :D) கொடுப்பது, டிரால் செய்வது, சரியான நேரத்தில் நோஸ் கட் கொடுப்பது என விளையாட்டு தனமாக மனைவி நடந்துக் கொண்டால் அதை ஆண்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதுகுறித்து பாராட்டாமல் போனாலுமே கூட, தனது நண்பர்களுடன் பேசும் போது புகழந்து பேசுவார்கள். ஆனால், கணவரின் குணாதியங்கள் பொருத்து எவ்வளவு கலாய்க்கலாம் என்பது அமைகிறது. எல்லாருமே எல்லார் நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
நண்பர்களுடனான பழக்கம்!
பெரும்பாலும் ஆண்கள் தனது மனைவியின் நண்பர்களுடன் நெருக்கமாக அல்லது பலநாள் பழக்கம் இருப்பது பல பேச துவங்கிவிடுவார்கள். ஆனால், பெண்கள் அப்படி இல்லை. ஒருவேளை மனைவி தனது நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் உடனும் சகஜமாக பேசி பழகுகிறார் என்றால், அந்த குணத்தை ஆண்கள் வெகுவாக ரசிப்பார்கள், விரும்புவார்கள்.
அக்கறை!
பெண்கள் தங்கள் வருங்கால கணவர் அக்கறையாக நடந்துக் கொள்ளவேண்டும். தன்னுடன் பாச மழை பொழிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதை அதிகமாக அவர்கள் கூறியே கேட்க முடியும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்கள் வருங்கால துணை தங்கள் மீது அதிக அக்கறை காண்பிக்க வேண்டும். செல்லமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
புதிய அனுபவம்!
பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகமாக புதிய அனுபவங்களை தேடி பயணிப்பார்கள். உதாரணமாக, வேலை இடங்களை எடுத்துக் கொண்டாலே அதிக நிறுவனங்களில் பணிபுரிபவர் ஆண்களாக தான் இருப்பார்கள். பத்து வருடத்தில் ஐந்தாறு நிறுவனங்கள் மாறி இருப்பார்கள்.
ஆனால், பெண்கள் அப்படி உடனக்குடன் நிறுவனம் மாற மாட்டார்கள். தங்கள் துணை புதிய அனுபவங்கள் கற்பதில், முயற்சிப்பதில் ஆர்வம் காட்டுபவராக இருந்தால்… மிகவும் பிடிக்கும் என்கிறார்கள் ஆண்கள்.
அக்கறை
திருமணத்திற்கு பிறகு தனது துணையின் வாழ்க்கை மீதும் சேர்ந்து இரட்டிப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஆண்களுக்கு இருக்கிறது. ஆனால், மனைவி அவர்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் தங்களை எதிர் பார்க்காமல் அவர்களே அக்கறையுடன், கவனமாக நடந்துக் கொள்பவராக இருந்தால்… அதை வரவேற்கிறார்கள் ஆண்கள். மேலும், இதுவொரு சிறந்த பண்பு என்கிறார்கள்.
பெட் லைப்!
பெரும்பாலான பெண்களுக்கு இதில் தயக்கம் இருக்கிறது. உடலுறவில் ஈடுபடும் போது, அந்த ஆர்வத்தை, ஆசையை ஆண்களே வெளிப்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஆனால், இதற்கு மாறாக பெண்களும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். செக்ஸ் என்பது இயல்பானது.. இதுகுறித்து பெண்கள் ஆர்வம் கொள்வதில் தவறில்லை.