ஆண்கள் சிகப்பாக இருக்கும் பெண்களை கண்டால் மயங்கிவிடுவார்கள் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு.
உதாரணத்திற்கு மேட்ரிமோனியல் இணைய தளங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிகப்பான மற்றும் நல்ல தோற்றம் கொண்ட மணமகன் அல்லது மணமகள் தேவை என்ற வரிகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.
ஏன் சிகப்பாக இருப்பவர்களை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்பதை பற்றி இந்த பகுதில் பார்க்கலாம் வாங்க..
கருப்பாக இருப்பவர்கள், தங்களை யாரும் கவனிப்பதில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.
இந்தியாவில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பெரும்பாலானவை, சிகப்பாக இருந்தால்தான் அழகு என்று கூறிவருகின்றன. ஆனால் அது தவறானது.
ஒரு குழுவிலோ அல்லது சமூகத்திலோ நம்மை மற்றவர்கள் விரும்பச் செய்வதற்கும் மற்றும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் சிகப்பழகு அவசியம் என்று அனைவரும் நினைக்கிறோம்.
ஆனால், பெண்கள் உயரமான, கருப்பான மற்றும் அழகான ஆண்களையே விரும்புகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் நம்முடைய தோலின் வண்ணத்தைக் கொண்டே நாம் எப்படிப்பட்டவர்கள் என்று மதிப்பிடுகிறார்கள்.
இதனால்தான்., ஆண்கள் தனக்கு வரும் மனைவி சிகப்பாகஇருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
சினிமா நட்சத்திரங்கள் சிகப்பாக இருப்பதால் நமது துணையும் சிகப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணுவதால்தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது
சினிமா நட்சத்திரங்களை மேக் அப் இல்லாமல் ஒருமுறை பாருங்கள்.. அப்புறம் தெரியும் உங்கள் மனைவி எவ்வுளவு அழகு என்று..?