பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. அவை வெவ்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருப்பது போன்று ஒவ்வொரு பூக்களும் தங்களுக்கென்று ஒரு தனித்தன்மையுடன் மலர்கின்றன.
கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 பூக்களில் நீங்கள் எதை தெரிவு செய்கிறீர்களோ, அதனை வைத்து உங்களது அழகு, செயல்கள் மற்றும் உங்களை பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ளலாம்.
Amaryllis
நீங்கள் மிகவும் அற்புதமானவர். எந்த ஒரு விஷயத்துக்கும் கூச்சப்படாமல் இருப்பவர்கள். அது காதலாக இருந்தாலும் சரி மற்றவர்கள் மத்தியில் பேசுவதாக இருந்தாலும் சரி எதையும் தைரியமாக சொல்பவர்.
எவ்வாறு பொழுதினை கழிக்க வேண்டும் என்பதை தெரிந்துவைத்திருக்கும் நீங்கள், அடுத்தவர்களின் கவலைகளையும் எப்படி புரிந்துகொள்வது என்பதில் தெளிவாக இருப்பீர்கள். அதுமட்டுமின்றி உங்களுக்கு எது தேவையோ அதனை சரியான முறையில் பெற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களிடம் பேசும்போதும் மிகச்சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பீர்கள்.
Lily
ஆற்றல் நிறைந்த நபராக இருப்பதால் எப்போதும் மற்றவர்களை கவர்வீர்கள். லில்லி பூ என்பது மிகவும் தூய்மையான மற்றும் நுட்பங்களின் அடையாளம் கொண்டிருக்கும். உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பீர்கள். புதிது புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று திட்டமிடும் நீங்கள், அதனை செயல்படுத்தமாட்டீர்கள்.
உற்சாகம் மற்றும் தைரியமான எண்ணம் கொண்ட நீங்கள், உங்களை சுற்றி எப்போதும் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருப்பீர்கள்.
Rose
ரோஜாவை போன்று நீங்களும் அழகாக இருப்பீர்கள். உங்களை சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்துகொண்டே இருப்பார்கள், ஏனெனில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை உங்களால் பேசுவது சற்று கடினம். நீங்கள் நேசமானவர், தைரியமானவர், மிகவும் உண்மையானவர்.
Tulip
நீங்கள் மிகவும் உணர்ச்சிவசம் கொண்டவர் என்பதால், காதலில் விழுந்தால் அதிலிருந்து வெளிவருவது சிரமம். தோல்விகளை உங்களால் தாங்கிகொள்ள இயலாது. உங்களுடன் நெருங்க பழகுபவர்களிடம் மிகவும் விசுவாசமாக இருப்பீர்கள்.
Orchid
இந்த மலர் தனித்தன்மையான அழகுடன் இருப்பதால், நீங்கள் மற்றவர்கள் கூறும் கருத்தில் இருந்து வேறுபட்டு தனித்தமையுடன் இருப்பீர்கள். பொதுவாக நண்பர்களுடன் உங்கள் குணநலன்கள் ஒத்துப்போகாது.