பொகவந்தலாவ டின்சின் தோட்டபகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சிறுமியின் சடலம் இன்று காலை 05.45மணி அளவில் இனங்கானபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் இருந்த சிறுமி விடியற்காலை 03மணி அளவில் கற்றல் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவூம் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறுமிமியை விடியற் காலை சிறுமியின் சகோதரி எழும்பி வந்து பார்க்கும் பொழுது தன் தங்கை தூக்கில் தொங்கிய வாரு இருந்த நிலமையை கண்டு கூச்சல் இட்டதை அடுத்து அலயவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்க்க வந்த பொகவந்தலவா பொலிஸார் விசாரனைகள ஆரம்பித்துள்ளதோடு
தூக்கில் தொங்கிய சிறுமியின கால்கள் இரண்டு கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளிபகுதியில் கூறையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாரு இருந்ததாகவூம் இச் சிறுமி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மாகாவித்தியாளத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீடகபட்ட சிறுமி 18வயதடைய பாடசாலை சிறுமியே ஆவார்.சிறுமியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு சம்பவ இடத்திற்க்கு தடையவியல் பொலிஸார் மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் வரவலைக்கபட்டு விசாரனைகளை ஆரம்பிக்கபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எதுவும் கண்டறியபடாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.