பெண்கள் என்றாலே மேக்கப், ஆடை ஆபரணங்கள் என்ற விடயங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். பொதுவாக எல்லா ஆண்களும் பெண்களை கவர எண்ணுகின்றனர்.
பெண்களும் ஆண்களின் கவனத்தை பெற எண்ணுகின்றனர்.
இந்த ஒரு காரணத்தினாலேயே ஆண் – பெண் உறவு ஒருவித ஈர்ப்புடன் தொடங்கி, காதலாய் கல்யாணமாய் மாறி கடைசி வரை நீடிக்கிறது.
நறுமணம்
*விளம்பரங்களில் காண்பிப்பது போல, FOG சென்ட் அடித்தால், பெண்கள் ஆண்களை சுற்றி வருவதாய் காண்பிக்கின்றனர்.
*உண்மையில் மூக்கை மூட வைக்கும் நாற்றம் இல்லமால், மூக்கை உறுத்தாத லேசான சுகந்தமான மணம் வீசும் வகையிலான நறுமண திரவியங்களை பயன்படுத்துதல் வேண்டும்.
*ஆண்கள் தங்களின் உடல்வாகு அறிந்து நறுமண திரவியங்களை தேர்வு செய்து பயன்படுத்துதல் வேண்டும்.
*இது பெண்களை கவர, அவர்களிடையே நல்ல மதிப்பைனை பெற எளிதில் உதவும். கேட்க அல்லது படிக்க சிரிப்பாக இருக்கலாம்;
*ஆனால், உண்மையில் இது தான் ஆண் – பெண் ஈர்ப்பில் நடக்கும் முதல் விஷயம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புருவம்
*நறுமணத்திற்கு பின் இரண்டாவதாக பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் விஷயம் புருவங்கள்.
*ஆகையால், அழகான வடிவான ஆண்மையைக் காட்டும் வகையில் புருவங்களை வளர்க்க முயலுங்கள்;
*அதை விடுத்தது அடர்ந்த காடு போல புருவங்களை வளர்த்து, பார்க்கும் பெண்களை பயமுறுத்த கூடாது.
*புருவத்தில் காயங்கள் இருந்தால், முடி வளராது இருந்தால் அதற்கான பிரத்யேக நடவடிக்கைளை மேற்கொண்டு கவரும் வகையிலான புருவங்களை வளருங்கள்;
மீசை
*பெரும்பாலான பெண்களுக்கு மீசை உள்ள ஆண்களை தான் அதிகம் பிடிக்கிறது; அதிலும் மிரட்டாத வகையில், முகத்தின் அழகை மேலும் அழகாக்கும் மீசையை அமைக்க வேண்டும்.
*மீசையை காடு போல வளர்த்து, வீரப்பன் போன்று காட்சியளிக்காமல், கட்சிதமாக கத்தரித்து, அழகாக வைத்திருக்க முயலவும்.
*உங்கள் மீசை பெண்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மினுமினுப்பு
*ஷேவ் செய்தால், வெட்டுக்காயம் எதுவும் இன்றி மொழுமொழு என்று இருக்காமல், நல்ல முக தோற்றத்தை தரும் வண்ணம் செய்யவும்.
*மேலும் முகத்தில் மற்றும் உடலில் ஏற்படும் செல்களின் இறப்பை குறைக்க, உடலை ஒருவித மினுமினுப்புடன் வைக்க, அதிக நீர் பருகுங்கள்;
*மேலும் மாஸ்டரைசர், தளர்த்திகள் போன்ற மேக்கப் பொருட்களை பயன்படுத்தி எந்நேரமும் புத்துணர்வுடன் திகழ முயற்சியுங்கள்.
*அந்த புத்துணர்வு உணர்வே, உங்கள் முகத்தை மினுமினுப்புடன் வைக்க உதவும்.
சோப்
*உடலில் மற்றும் முகத்தில் வறட்சியை ஏற்படுத்தாத, அதிக மணம் வீசாத, ஓரளவு மணம் கொண்ட சோப்பினை பயன்படுத்த முயலுங்கள்.
*மேலும் நீங்கள் பயன்படுத்தும் சோப் வியர்வையை முற்றிலும் போக்குகிறதா, உடலுக்கு புத்துணர்வு தருகிறதா என்று முயற்சித்து அறியவும்.
*வியர்வை வாசம் வராமல், சுகந்தமான மணம் உங்களிடமிருந்து வெளிப்படுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்; இது பெண்களை கவர அதிகம் உதவும்.
தலைமுடி
*ஆண்கள் தன் தலைமுடிக்கு கண்டதையும் பயன்படுத்தி, முடியை கெடுத்து விடாமல் முடியை அழகுடன் திகழும் வண்ணம் பராமரிக்க வேண்டும்.
*ஏனெனில் முகம் என்னதான் அழகாக இருந்தாலும், அதற்கு முழுவடிவம் அளித்து மேலும் அழகு படுத்துவது தலைமுடி தான்.
*எனவே, முடியை கட்சிதமாக உங்களுக்கு பிடித்த வடிவில் வெட்டி, அல்லது முக அமைப்பிற்கு ஏற்றாற் போல் கத்தரித்து;
*உங்கள் அழகால் அழகு பெண்ணை உங்களுக்கு சொந்தமாக்க முயலுங்கள்; இது நல்ல பலனை தரும்.
தாடி
*உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு, தாடி வைத்தால் நன்றாக இருக்குமா அல்லது இல்லையென்றால் நன்றாக இருக்குமா என்று சோதித்தறியுங்கள்.
*பின் அடர்ந்த தாடி இருக்க வேண்டுமா அல்லது ட்ரிம் செய்த தாடி கொண்டிருந்தால், நீங்கள் அழகாக இருப்பீர்களா என்று பாருங்கள். பின் அதற்கேற்றவாறு தாடியை வளர்த்து, அதனை சரியாக பராமரியுங்கள்.
*தாடி உள்ள ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உதடுகள்
*ஆணின் உதடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பார்த்து பெண்கள் மனம் அவர்களை மதிப்பிடுகிறது;
*அதாவது, ஆண்களின் உதடு வெடிப்புகளுடன், கருப்பாய் இருந்தால், அது நல்ல மதிப்பை பெண்களிடையே ஏற்படுத்தாது.
*எனவே, லிப் பாம் போன்ற மேக்கப் ஐட்டங்களை பயன்படுத்தி உதட்டினை எப்பொழுதும் ஈரப்பதத்துடன், கவரும் தன்மையுடன் வைத்திருக்க முயலுங்கள்.
உடலமைப்பு
*உங்கள் உயரத்திற்கு ஏற்ற சரியான எடையி கொண்டிருக்க முயலுங்கள். ஃபிட்டாக அதாவது அதிக குண்டும் இல்லாது, அதிக ஒல்லியும் இல்லாது உடல்வாகுக்கேற்ற எடை கொண்ட ஆண்கள் பெண்களை அதிகம் கவர்கின்றன.
*ஆகையால், சரியான உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றை சரியாக கடைபிடித்து, அழகான, செக்ஸியான உடலமைப்பு கொண்டு திகழ முயற்சியுங்கள்.
ஆடை
*உங்களுக்கு பொருந்தும், உங்கள் உடல்வாகை மேலும் வசீகரமாக்கும் ஆடைகளை தேர்வு செய்து அணிய முயலுங்கள்.
*பார்மல் அல்லது கேசுவல் என எது அணிந்தாலும், உங்களை பார்க்கும் பெண்களுக்கு உங்களை கட்டியணைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் வகையில், உங்கள் உடலை, ஆடையை, முகத்தை வைத்திருக்க முயலுங்கள்;
*உங்களின் ஒட்டுமொத்த உருவம் உடை, உடல், முகம் என அனைத்தும் வசீகரத் தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த பத்து குறிப்புகளை சரியாக பின்பற்றினால், எந்த பெண்ணையும் அசால்ட்டாக கவரலாம்;
*அவர்களின் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி புரியலாம் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.