Loading...
சிறு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 80,000 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சார்ஜன் உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
காசோலை மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்காக சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியிருந்தார்.
Loading...
குறித்த தொகையில் 20,000 ரூபாவை ஏற்கனவே பெற்றுக்கொண்ட சந்தேக நபர் எஞ்சிய 80,000 ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட சார்ஜனான சங்க சோபித்த சில்வா இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
Loading...