அச்சத்தை ஓட விரட்டுவது தான் வெற்றியே தவிர, அச்சத்தை கண்டு அஞ்சி ஓடுவது அல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கஷ்டம், தோல்வி, தடுமாற்றம் வரத்தான் செய்யும்.
ஆனால், அதை எண்ணி, அதற்காக வருந்தி நாம் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து ஒதுங்குவது முட்டாள்தனம்.
நாம் விரும்பும், நம்மை விரும்பும் நபர்களுக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். செய்ய வேண்டும்.
நம்மை விரும்பும் நபர்களை இழந்து பின் வாழும் வாழ்க்கை எதற்குக் சமம்? அதன் மதிப்பு என்ன?
–கஷ்டம்னா நிக்கணும்!
நாம் விரும்பும், நம்மை விரும்பும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை, கஷ்டம் என்றால் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காக இப்படத்தில் சிம்பு சண்டை போடுவது, துப்பாக்கி எடுத்து சுடுவது போல எல்லாம் செய்ய வேண்டும் என்றில்லை. அரவணைப்பாக நான்கு வார்த்தைகள் பேசி அவர்களுடன் இருந்தால் கூட போதுமானது தான்.
–நண்பன்னா உதவனும்!
நண்பன் ஆபத்தில் இருக்கும் போது, துன்பத்தில் இருக்கும் போது, உதவி நாடும் போது தொலைவு என பாராமல் உதவிக்கு செல்ல வேண்டும். எதை எதிர்பாராமல் உதவ செல்வது தான் நட்பு!
–சாகுறதுக்கு முன்னாடி லவ்வ சொல்லணும்!
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வு, உறவு. அதை மறைத்து வாழ்வது, கூற தயங்குவது என்பது மிகப்பெரிய தவறு. உங்கள் காதலை சொல்லாமலே சாவதை விட பெரிய கோழைத்தனம் வேறேதும் உண்டா?
–பழிவாங்குறதா இருந்தாலும் நேர்மையா இருக்கணும்!
பழிக்குப்பழி வாங்குகிறேன் என உங்கள் வாழ்வை நீங்களே அழித்துக் கொள்ள கூடாது. உங்களை அழிக்க நினைப்பவர்கள் முன்பு நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அது தான் பெரிய வெற்றி. அதுதான் நீங்கள் அவர்களுக்கு அளிக்கும் பெரிய தண்டனை.
–எந்த விஷயமும் யோசிச்சு செய்யணும்!
வாழ்க்கையில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். படிப்பு, வேலை, காதல், இல்லறம், தொழில் என அனைத்திருக்கும் இது பொருந்தும்.
–காதல்னா கட்டுப்பட்டோட இருக்கணும்!
காதலின் புனிதம், நேர்மை, உண்மை, அதன் வெற்றி அனைத்தும் அதன் கட்டுபாட்டில் தான் இருக்கிறது. எனவே, காதலில், காதலிக்கும் பெண் இடத்தில் கட்டுப்பாடுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
–காதலிச்சு ஏமாத்த கூடாது!
காதலித்து, ஆசை வார்த்தை காட்டி, ஏமாற்றுவது மிகப்பெரிய பாவ செயல். இது எப்போது வேண்டுமானாலும் உங்களை வீழ செய்யும். எனவே, பெண்களை ஏமாற்ற துளியும் எண்ண வேண்டாம்.