எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கண்டதும் காதல் என்பது கை கூடும் என்பது குறித்து காண்போம். குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் கை கூடுமா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றன.
பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன் காதல் ஏற்படும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு.
இந்த காதல் ஐந்தாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது அல்லது அதிபதி 5ஆம் அதிபதி இடத்தில் இருப்பது திருமணத்தில் முடியும்.
அல்லது 7ஆம் அதிபதிக்கும் 5ஆம் அதிபதி பார்வை பெறுவது அல்லது 7ஆம் அதிபதியின் நட்சத்திரத்தில் 5ஆம் அதிபதி இருப்பது போன்றவையும் காதல் திருமணத்தில் அமையும்.
ஒன்பதாம் அதிபதிக்கும், வீட்டிற்கும் 5ஆம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், 7ஆம் அதிபதிகளை சனி பார்த்தால் சுக்கிரன், சனி 7ஆம் இணைந்திருந்தால் காதல் திருமணம் அமையும்.
லக்கினத்திற்கு 1, 5, 9யில் சுக்கிரன் இருப்பது மற்றும் சந்திரன், சுக்கிரன் இணைந்து நீர் இருந்தாலும் காதல் திருமணம் அமையும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.
காதலுக்கான ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும்.