ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு மாதிரி தங்கள் காதலன்/ காதலியிடம் நடந்துகொள்வர். அவர்களது ரசனைகள் என்னென்ன? அவர்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் ? துணையிடம் எவ்வாறு நடந்துகொள்வார்கள்? எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி காதலிப்பர் என தெரிந்துகொள்வோமா?
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் காதல் விடயத்தில் சற்று பழமைவாதிகள். தங்களது துணையுடன் அதிக நேரம் செலவிட விரும்பும் அவர்கள், தங்கள் அந்தரங்க விடயங்களை இயல்பாக துணையிடம் பகிர்வதற்கு கூச்சப்பட மாட்டார்கள்.
ரிஷபம்
துணைக்கு எதிர்பாரா பரிசு கொடுப்பது, லாங் டிரைவ் செல்வது என இவர்கள் துணையை மகிழ்விக்கும் விதம் ஆச்சர்யம் அளிக்கும். ஒருமுறை காதலில் விழுந்தால் இவர்கள் கடைசி வரை துணையிடம் அன்பாக நடந்து கொள்வர்.
மிதுனம்
துணையுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிதுன ராசிக் காரர்கள். அடிக்கடி போன் மூலம் தொடர்பு கொள்வர். குறுஞ்செய்தி அனுப்பு உடனே பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பர். சில சமயங்களில் இது எரிச்சலூட்டலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் காதல் விடயத்தில் மிக உணர்ச்சி வசப்படுபவர்கள். இவர்கள் சமையல், வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அன்றாட விடயங்களுக்கு உதவியாக இருப்பர்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் ஈர்ப்பு சக்தி கொண்டவர்கள். துணையை தன்பக்கம் எளிதில் ஈர்த்துவிடுவர். அதேசமயம் அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராகவும் இருப்பர்.
கன்னி
இவர்கள் ரொம்ப பிராக்டிகலானவர்கள். எதையும் இதயத்தில் இருந்து சிந்திக்காமல் மூளையில் இருந்து சிந்திப்பவர்கள். தங்கள் துணையின் உடல்மொழி, உடை அணியும் விதம் ஆகியவற்றை மாற்ற அடிக்கடி யோசனை சொல்லிக்கொடுத்த அவர்களை ஹேண்ட்சம் ஆக்குவர்.
துலாம்
தூலா ராசிக்காரர்கள் காதல் விடயத்தில் குழப்பவாதிகள் ஆவர். இவர்கள் தங்கள் துணையிடமே தங்கள் குழப்பத்தைப் பற்றிக் கூறி அதற்கு தீர்வு கேட்பர்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் துணைமீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பவர்கள். இவர்கள் ஒருமுறை தன் துணையை நம்பிவிட்டால், அவர்களைப் பற்றி யார் என்ன கூறினாலும் அதனை ஏற்கமாட்டர். துணைமேல் அத்தனை அன்பை பொழிவர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் அட்வெஞ்சர் பிரியர்கள். தங்கள் துணையை ஆண்டுக்கொருமுறை லாங் டிரிப் அழைத்துச் செல்வர். புதிய உணவுகளை சாப்பிட வைப்பர். அவர்களை அட்வெஞ்சர் பிரியர்கள் ஆக்குவர்.
மகரம்
நவநாகரிக கிளாசி லவ் செய்பவர்கள் மகர ராசிக் காரர்கள். கேண்டில் லைட் டின்னர், பீச்சில் அதிகாலை நடைபயிற்சி என வித்யாசமாக செயல்கள் மூலமாக தன் துணையை குஷிப்படுத்த விரும்புபவர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டர். அவர்கள் எண்ண ஓட்டங்களை மறைத்து துணையிடம் பேச முயல்வர்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சென்சிட்டிவ் ஆனவர்கள். இவர்கள் விளையாட்டுத்தனமான சிறிய கிண்டலைக் கூட தாங்கமாட்டர். அதனை நினைத்து அதிக கவலை அடைவர். எனவே இவர்களை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது.