கனடாவில் தமிழ் இளைஞனின் செயற்பாடு குறித்து அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டு செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் Calgary பகுதியிலுள்ள தனக்கு தெரிந்த ஒரு நண்பருக்காகவும். தெரியாத நண்பருக்காவும் சிறுநீரகம் தேடி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த மோஹன் பாலசந்திரன் என்பவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
Antonela Marian மற்றும் Sarjoon Abdul-Cader ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒரு போதும் சந்தித்து கொண்டதில்லை. எனினும் இருவரும் பொதுவான நோய் தாக்கம் ஒன்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மீது அவர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் மூலம் தங்களுக்கு சிறுநீரகம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எந்த நேரத்திலும் உயிர் போகலாம். இருவருக்கும் ஆரோக்கியமான சிறுநீர் பொருத்தப்பட்டால் மாத்திரமே அவர்கள் உயிர்வாழ முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வரை அவர்கள் ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை மருத்துவ கண்கானிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் மோஹன் பாலசத்திரனுடன் Abdul-Caderக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அன்று முதலே நண்பனின் உயிரை காப்பாற்றுவற்கான நடவடிக்கையில் மோஹன் ஈடுபட்டுள்ளார்.
அதற்காக 75 கையொப்பங்கள் சேகரித்து ஸ்டிக்கர் அடித்து பலரிடம் அவர் உதவி கோரி வருகின்றார்.