சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடங்கி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் வரை ஓட்ஸை விரும்பி உண்கின்றனர். ஓட்ஸ், கோதுமை ரவை சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஓட்ஸ் – கோதுமை ரவை இட்லி
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1 கப்
கோதுமை ரவை – 1/2 கப்
தயிர் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட் – 1
பேக்கிங் சோடா – 1 1/2 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை :
கறிவேப்பிலை, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
ஓட்ஸ், கோதுமை ரவையை தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை ஆற வைக்கவும்.
சூடு ஆறியதும் ஓட்ஸை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ், கோதுமை ரவை, துருவிய கேரட், கொத்தமல்லி, உப்பு, பேக்கிங் சோடா, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு நன்குக் கலக்கவும். அதில் மாவு பதத்திற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலக்கவும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும். இட்லி மாவு தயார்.
இட்லி குக்கர் தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
சுவையான இட்லி தயார்.
இதற்கு எல்லாவிதமான சட்னியும் பொருத்தமாக இருக்கும்.