வாழ்க்கையில் நமக்கு பல தடைக்கற்கள் வந்தாலும் நம் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை, கடின உழைப்பு தொடரும் வரை நமது வாழ்க்கையில் வெற்றிப்படிகளும் நீண்டு கொண்டே செல்லும் என்பதற்கு நிர்மலா என்ற தமிழ்பெண் உதாரணம்.
தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா. தமிழ் மீடியத்தில் படித்துள்ள நிர்மலா, chemical Engineering பட்டப்படிப்பை சென்னையில் படித்து முடித்தார்.
கிராம சூழலில் வளர்ந்தவர் என்பதால் ஆங்கிலம் தெரிந்தாலும் அதனை பிறரிடம் பேசுவற்கு சற்று தயக்கம், பெண் பிள்ளை என்றால் தலைகுனிந்து நடக்கவேண்டும் என்ற பெற்றோரிடன் கட்டுப்பாடு, இசை,பாடல், நடனம் என்று பல்வேறு கலைகளில் விருப்பம் இருந்தாலும் அதில் ஆர்வம் காட்ட இயலாது நிலை என்று பல்வேறு கட்டுப்பாடுகளை தனது வாழ்க்கையில் சந்தித்தவர்.
ஆனால், எவ்வளவு தடைகள் வந்தாலும் நாம் சாதிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிர்மலாவின் மனதிற்கு அணைய சுடராய் இருந்தது.
இளங்கலை முடித்ததும் தனக்கு திருமணம் செய்துவிட்டால் படிக்க முடியாது என்று எண்ண முதுகலை படிப்புக்கு விண்ணப்பித்து, அந்த படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்.
காதல் திருமணம் செய்துகொண்ட தமிழகத்தில் வசித்து வந்த இருக்கு பிறந்த முதல் குழந்தை இறந்துவிட சோகத்தைல் இருந்த இவர், தமிழகத்தில் இருந்து லண்டன் சென்றார்.
புத்தக வாசிப்பு ஒரு புறம், இணைய தன வாசிப்பு ஒரு புறம் என் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொண்டார்.
முதலில் மெக்கானிக்கல் துறை, அடுத்து சாப்ட்வேர், நிலாச்சாரல் இணையதளம் என்று அவருடைய பயணம் வேகமெடுத்தது.
11 புத்தகங்களை எழுதியிருக்கும் நிர்மலா, 300 க்கும மேற்பட்ட புத்தகங்களை அயல்நாட்டு நூலகங்களுக்கு டிஜிட்டலைஸ் செய்து கொடுத்திருக்கிறார். நிலாச்சாரல் இணையதளம் மூலம் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தற்போது, ஒரு சாப்ட்வேர் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறார். இவருடைய அலுவலகத்தில் பல்வேறு மொழிகளை பேசுபவர்கள் பணியாற்றுகிறார்கள், அவர்களை தனக்கே உரிய பாணியில் மிகவும் தன்னம்பிக்கையுடன் நிர்வகிக்கிறார் நிர்மலா.