ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பினை பேணிய இரண்டு பெண்களின் குடியுரிமையினை இரத்து செய்வதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
லண்டனிலிருந்து சிரியாவிற்கு சென்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்ட இரண்டு பாகிஸ்தான் பெண்களின் குடியுரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது.
Reema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோரின் பிரித்தானிய குடியுரிமையே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.
Reema Iqbal மற்றும் அவரது சகோதரி Zara ஆகியோருடன் எட்டு வயதிற்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் சிரிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பதின்மவயதுப் பெண்ணான ஷமீமா பேகதத்தின் குடியுரிமையும் இவ்வாறு பரிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
ஷமீமா பேகத்தின் குழந்தை இறந்தது: பிரித்தானியா மீது கடும் விமர்சனம்
ஷமீமா பேகத்தின் ஆண் குழந்தை சிரியாவில் இறந்துள்ள நிலையில் பிரித்தானிய உள்துறை செயலாளர் ஸாஜித் ஜாவிட் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்வதற்காக லண்டனை விட்டுச் சென்ற பதின்மவயதுப் பெண்ணான ஷமீமா பேகதத்திற்கு வடகிழக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் கடந்த மாதம் குழந்தை பிறந்திருந்தது. இதைத்தொடர்ந்து ஷமீமா தமது நாட்டிற்குத் திரும்ப விரும்புவதாக தெரிவித்திருந்தார். எனினும் இதனை ஏற்றுக் கொள்ளாத பிரித்தானியா அவரது குடியுரிமையை பறித்தது.
இந்நிலையில் குடியுரிமை வழங்கப்பட்டிருக்குமானால் ஷமீமாவின் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என பிரித்தானிய உள்துறை செயலாளர் ஜாவிட் மீது பலரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
இதேவேளை எந்த குழந்தையின் இறப்பும் துயரம் தான் எனினும் எந்த தீவிரவாத அமைப்புகளுடன் இணைய கூடாதென பிரித்தானிய கடும் தடைகளை விதித்துள்ளது. இதை மீறியே 2015 ஆம் ஆண்டில் ஷமிமா சென்றுள்ளார் என பிரித்தானிய அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஷமீமா பேகத்தின் நெதர்லாந்து கணவர் ஐஸ் அமைப்புக்காக போராடி இருந்தார் என்பதோடு அவருக்கும் நெதர்லாந்து செல்வதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.