Loading...
வெளிநாடு செல்ல முற்பட்ட பயணியொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
போர 12 ரக துப்பாக்கியொன்றினை பயணப்பொதியில் மறைத்து வைத்து பயணிக்க முயற்சித்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் லண்டன் நோக்கி செல்வதற்காக வந்தவர் என தெரியவந்துள்ளது.
Loading...
வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவராவார்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Loading...