போதை மாத்திரை விற்று டி.வி. ஊழியர் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பாதித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவைச் சேர்ந்த சுகுசிமோன் ஒபினா (30) என்ற வாலிபரை போதை பொருள் தடுப்பு பொலிசார் சென்னையில் கைது செய்தனர்.
அவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவரிடம் விசாரித்த போது பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து போதை பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வு பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலந்தூர் வேதகிரி தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரது வீட்டில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள். அத்தோடு குற்றவாளியும் பிடிபட்டுள்ளார்.
கார்த்திக் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.