இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது.
GB WhatsApp, Yo WhatsApp, FM WhatsApp என்ற பெயர்களில் மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்படும் பதிப்புகளை பயன்படுத்தும் பயனாளர்களின் பழைய கணக்குகளை அனைத்தையும் முடக்குவதற்கு பேஸ்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அவ்வாறு பயன்படுத்துபவர்களின் தொலைபேசி இலக்கங்களை அடையாளம் கண்டு மீண்டும் வட்ஸ்அப் பயன்படுத்த முடியாத வகையில் முடக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழுவின் தலைவர் யசிரு குருவிட்டகே மெதிவ் தெரிவித்துள்ளார்.உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பில் ஒருவர் ஒரு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாம் தரப்பினரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள புதுப்பித்தலுக்கமைய தங்களால் தரவுகளை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வட்ஸ்அப் நிறுவன அதிகாரி, தன்னிடம் கூறியதாக யசிரு குருவிட்டகே மெதிவ் தெரிவித்துள்ளார்.அவ்வாறான கணக்குகளை பயன்படுத்த வேண்டாம் என அவர் இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.