Loading...
நியூசிலாந்து நாட்டின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது கிறிஸ்ட்சர்ச். இந்திய நேரப்படி மாலை 4.32 மணிக்கு கிறிஸ்ட்சர்சில் இருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பயங்கரமான நிலநடுக்கம் நிலை கொண்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை சேதம் குறித்த எந்த தகவலும் உடனடியாகத் தெரியவில்லை.
கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Loading...
கடந்த 2011-ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் 185 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து நாசமாயின.
Loading...