கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தாத்தாவாகி விட்டார் என்றும், அதுவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டை பேரக்குழந்தைகளுக்கு தாத்தா ஆனார் என்ற செய்தியினை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.
இந்த குழந்தைகளுடன் அவர்களின் கொள்ளு தாத்தா பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொஞ்சி விளையாடும் காணொளியானது ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் ஒரு குழந்தையிடம் அந்த குழந்தையின் பெயரை கூறி வணக்கம் சொல்லுங்கள் என்று கூறும் பொழுது, அந்த குழந்தை வணக்கம் வைப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்து 4 மாதம் ஆன குழந்தை சொல்லிக் கொடுத்ததை கேட்டு செய்து காண்பிப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் குழந்தை சொன்னதை செய்து காட்டியதும், மகிழ்ச்சியில் பூரிப்படைந்த டாக்டர் ராமதாஸ் கொள்ளு பேத்திக்கு முத்தமிட்டார்.