விடுதியொன்றில் இருந்து 16 வயதான சிறுமியும், 38 வயதான நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் படகமுவ பகுதியில் உள்ள விடுதியிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் விடுதியில் முகாமையாளராக செயல்பட்டு வந்த 17 வயதான இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவால் கடந்த 9 ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சுற்றிவளைப்பின் போது அந்த விடுதியின் உரிமையாளர் தப்பிச் சென்றுள்ளார்.
கைது செயய்ப்பட்டுள்ள சிறுமி கெக்கிராவ பகுதியை சேர்ந்தவர் எனவும் கைது செய்யப்பட்ட 38 வயதான நபர் குருநாகல் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி இதற்கு முன்னரும் பல முறை குறித்த நபருடன் விடுதிக்கு வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சட்டத்தை வலுப்படுத்தும் பிரிவின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்