யுனிலீவர்(ஸ்ரீ லங்கா)லிமிடெட் நிறுவனம் இலங்கையில் சலவை மற்றும் குளியல் சவர்க்காரங்களை உற்பத்தி செய்யும் ஓர் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் நேச்சர் பியுட்டி கிரியேசன் நிறுவனத்தின் உற்பத்தியான குளியல் சவர்க்காரத்திற்கு விளம்பர பெயராக ”சண்டி பண்டா ” என்ற பெயரை பயன்படுத்துவதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து இடைக்கால தடையுத்தரவொன்றை கடந்த வருடம் 2018 செப்டம்பர் மாதம் நீதி மன்ற உத்தரவை பெற்றுக்கொண்டது.
இது சம்பந்தமான வழக்கில் பிரதிவாதியான பியுட்டி கிரியேசன் நிறுவனம் தனது பதில் மனுவில் குறிப்பிட்ட விடயத்தில் யுனிலீவர் நிறுவனத்தின் உற்பத்திகளான சலவை மற்றும் குளியல் சவர்க்காரங்களில் “TFM” என்ற இராசயன கலவைகள் 76.5% சேர்க்கப்பட்டிருப்பதால் அது குளியல் சவர்க்காரமாகாது. எனவே எமது உற்பத்திக்கான இடைகால தடையை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டது.
அது மட்டும்மல்லாது குளியல் சவர்க்காரத்தில் மிக குறைந்த சலவைதுாள் கலக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கலவையானது ” சோடியம் டொசில்ப்பென்சின் சல்போனேட்(Sodium Dodcylbenzene Sulfonate) SDBS என்பதையும் தனது மனுவில் குறிப்பிட்டது.
இந்த இருசாரரின் மனு பதில் மனுவை ஆராய்ந்த வர்த்தக கௌரவ நீதிமன்ற நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் பல உண்மை தன்மையற்ற விடயங்களுடன் நீதி மன்றை தவறான வழிக்கு இட்டு செல்லக்கூடியவகையில் போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாகவும் மேலும் இவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி இவர்களின் தயாரிப்பான சலவை செய்யும் சவர்க்காரங்களில் சேர்க்கப்படும் SDBS இந் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குளியல் சவர்க்காரங்களான ”லக்ஸ் ” மற்றும் ”லைப்போய் ” ஆகிய சவர்க்காரங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந் நிறுவனத்தால் வேறு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் குளியல் சவர்க்காரங்களில் இந்த இரசாயன கலவைகள் சேர்க்கப்படுவதில்லையெனவும், அத்தோடு டெட்டர்ஜன் கலவை சேர்க்கப்படுவது சலவை செய்யவும் பாத்திரங்களை சுத்தம் செய்யவும் வீட்டு தரைகளை சுத்தம் செய்யவும் மற்றும் வீட்டு பாவனை பாத்திரங்களை சுத்தம் செய்யவுமே உலகம் முழுதும் பாவிக்கப்படுகின்றது.
ஆனால் யுனிலீவர் நிறுவனத்தால் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின்படி குளியலுக்காக பயன்படுத்தப்படும் லக்ஸ் மற்றும் லைவ்போய் குளியல் சவர்க்காரத்தில் மேற்படி மேற்படி இரசாயன கலவைகளை கலந்து இலங்கையில் பாவனையானர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுவருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு மேற்படி இரசாயன கலவைகள் ”லக்ஸ்” சவர்க்காரத்தில் 3.1% முதல் 4.1 %வரையும் லைப்போய் சவர்க்காரத்தில் SDBS சேர்க்கை 4.6% முதல் 5.1% வரை கலக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
மேலும் வழக்கின் பிரதிவாதியான நேச்சர் பியுட்டி கிரியேசன் சார்பில் சமர்பித்த ஆவனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி பாத்திரங்கள் சுத்தம் செய்யப்படும் கலவைகளில் சேர்க்கப்படும் இரசாயன கலவையான ”SDBS” 4%மாகும். இதுவே பாத்திரங்கள் சுத்தம் செய்ய உகந்ததாகும்.
ஆனால் யுனிலீவர் கொடுத்துள்ள ஆவனங்களின்படி TFM பெறுமதி முற்றிலும் போலியானதாக இருப்பதாகவும் சுற்றிகாட்டப்பட்டுள்ளது. எனவே யுனிலீவர் நிறுவனம் வாடிக்கையானர்களை தவறாக வழி நடத்தியுள்ளதாகவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம் தனது தீர்ப்பில் நேச்சர் பியுட்டி கிரியேசன் நிறுவனத்தின் உற்பத்தியான குளியல் சவர்க்காரத்திற்கு விளம்பரமாக ” சண்டி பண்டா ” என்ற பதத்தை விளம்பரமாக பயன்படுத்த முடியும் என்று உத்தரவிட்டதோடு சலவை சவர்க்காரத்திற்கு குளியல் சவர்க்காரம் என்று கூறமுடியாது என்றும் ”SDBS” இரசாயன கலவை சேர்க்கப்பட்டவை சம்பந்தமாக பாவனையாளர்களுக்கு அறிவுபுகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அதன் மூலம் பாவனையாளர்கள் குளியல் மற்றும் சலவை சவர்க்காரங்களின் வேறுபாட்டை அறிந்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் திருமதி. விஸ்மி பெர்ணன்டோ மற்றும் திரு.ரீகான் அல்மெய்டா ஆகியவர்களுடன் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சந்திக ஜயசுந்தர ஆகியோருடன் திரு உபேந்திரா குணசேகர நேச்சர் பியுட்டி கிரியேசன் நிறுவனத்தின் சார்பாக ஆஜரானார்கள்.