பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல், விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், இன்னும் ஒரு வாரத்தில் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விசேட கொடுப்பனவாக 50 ரூபாய் வழங்கப்படுவது குறித்து வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித முன்மொழிவுகளும் முன்வைக்கப்படாத நிலையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.