தமிழனின் பாரம்பரியமான பல விஷயங்களை இன்று உலகமே வியப்புடன் பார்த்து கொண்டிருக்கின்றது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிளும் சற்றே பழமை கலந்த பண்பு இருப்பதே நம் முன்னோர்களை நாம் பின்பற்றுவதை எடுத்து காட்டுகிறது.
தமிழன் வீரத்திலும் விவேகத்திலும் எண்ணற்ற ஆற்றலுடனே பண்டைய காலத்தில் இருந்திருக்கிறான்.
மக்கள் ஆரோக்கியமான இயற்கை உணவை உண்டு நலமான வாழ்வை மேற்கொண்டனர். அவற்றில் பழங்களும் அடங்கும். நம் பாரம்பரிய பழங்களாக கருதப்படுவது இந்த முக்கனிகளான மா, பலா, வாழைதான்.
பல வகையான ஊட்டசத்துக்களும் இதில் நிறைந்துள்ளது. இந்த பதிவில் பலாப்பழம் எவ்வாறு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது என்பதை அறிவோம்.
பலா என்னும் அற்புதம்..!
மற்ற பழங்களை போன்றே இந்த பலவிலும் ஏராளமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. நம் முன்னோர்கள், முக்கனிகளில் பலாவை சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரண ஒன்றாக எண்ண முடியாது.
இதன் மகத்துவம் அதிகமானது என்பதாலேயே முக்கனிகளில் இதனை சேர்த்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு உருவத்தில் பெரிதாக இருந்தாலும் இதிலுள்ள பழத்தின் சுவை அதி பயங்கரமானது.
பலாவின் மகத்துவம்…!
முக்கனிகளில் பெரிதான இந்த பழத்தின் ஊட்டசத்துக்கனும் சற்றே அதிகம்தான்.
165 கிராம் பழத்தில் உள்ள சத்துக்கள் பின்வருமாறு…
- கலோரிகள் 155 (649 kJ)
- புரதசத்து 8.1(33.9 kJ)
- வைட்டமின் எ 10%
- வைட்டமின் சி 18%
- ரிபோபிளவின் 11%
- மெக்னீசியம் 15%
- காப்பர் 15%
- மக்னெஸ் 16%
வேறு எப்படி சாப்பிடலாம்..?
கனியாத காயாக உள்ள பலாவை சமைத்து சாப்பிட்டால் அதனால் எந்த வகையிலும் சர்க்கரையின் அளவு கூடாது. மாறாக சர்க்கரையின் அளவு சீராக வைத்திருக்குமாம். கனியாத பலாவில் மிகவும் குறைந்த அளவே இந்த glycemic index உள்ளது. அதனால், இதனை தாராளமாக சர்க்கரை நோயாளிகள் எடுத்து கொள்ளலாம்.
365 நாட்கள் சாப்பிட்டாலும் தவறில்லையாம்..!
இது உண்மையில் ஆச்சரியமான தகவல்தான். சர்க்கரை நோயாளிகள் இந்த பழுக்காத பலா பழத்தை சமைத்து அன்றாட உணவில் சேர்த்து கொண்டால், அவர்களின் உடல் எடை கச்சிதமாக இருக்குமாம். இது ஒரு சிறந்த உணவாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. அத்துடன் இதில் உள்ள குறைந்த கலோரி அளவு உடல் பருமனை கூட விடாது.