யுத்தம் காரணமாக காணாமல் போனவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலங்கள் தெரிவித்துள்ளது.
விடுதலை புலி உறுப்பினர்கள் உட்பட காணாமல் போனோரின் அனைவரது குடும்பங்களுக்கும் 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கவுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் காணாமல் போன பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினருக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று 1988 – 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர், அரசியல் காரணங்களுக்கமைய காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த மாதாந்த கொடுப்பனவுகளை பெறுவதற்கு, காணாமல் போனோரின் உறவினர்கள், சான்றிதழ் ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் இதனை உறுதி செய்வதற்கு போதுமான ஆவணங்கள் இல்லாமையினால் இந்த சான்றிதழை குறுகிய அளவிலானோர் மாத்திரமே பெற்றுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சான்றிதழை பெறுவதற்கு இலகுவான நடவடிக்கை ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த கொடுப்பனவை வழங்குவதற்காக 500 பில்லியன் ரூபாய் பணம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.